DSC04300.jpg

24 மணிநேர ஜெபம் (24 hours Prayer)

தேசங்களுக்காக, ஜனங்களுக்காக, சபைகளுக்காக, மன்றாடுவதே இவ்வூழியத்தின் தரிசனம். அந்த தரிசனத்தை மையமாக கொண்டு 24மணி நேரமும் தொடர் ஜெபம் நடத்தப்படுகிறது. ஆங்காங்கு இருக்கும் தேவபிள்ளைகள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஜெபிக்கிறார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் ஜெபக்குறிப்புகள் அனுப்பப்படுகிறது.

வட இந்திய ஊழியங்கள் (North Indian Ministries)

DSC_204651a9dff762d18.jpg

             வட இந்தியாவில் கடந்த 20 வருடமாக மிஷனரி பணி நடைபெறுகிறது. மிஷனரிகளை அனுப்புதல், பல்வேறு மிஷனரி ஸ்தாபனங்களில் மிஷனரிகளை ஊக்குவித்தல், புதிய விசுவாசிகளை விசுவாசத்தில் உறுதிப்படுத்துதல், புதிய இடங்களில் ஆலயம் கட்டுதல், சுவிசேஷ நற்செய்தி கூட்டங்கள் நடத்துவது, ஜெபம் முகாம் நடத்தி விசுவாசிகளை ஜெபிக்க வைப்பது.


 

புத்தக ஊழியங்கள் (Book Ministries)

Book-Kalyana-Parisu

                தேர்தல் நேரங்களில் நல்லாட்சி அமைய புத்தக வடிவில் ஜெபக்குறிப்புகளை வெளியிடுகிறோம். வியாபாரிகள் நலன் விரும்பி “வியாபாரிகளுக்கு விருந்து” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். காவல் துறையினரின் செயல்பாட்டை ஊக்குவிக்க “போலீசாரின் பொக்கிஷம்” என்ற புத்தகம் வெளியிட்டுள்ளோம். போதகர்கள் சபைகளை திறம்பட நடத்த “போதகர்களின் பொக்கிஷம்” என்ற புத்தகம் வெளியிட்டுள்ளோம். குடும்பங்களுக்காக “குடும்ப பொக்கிஷம்” என்ற புத்தகம் வெளியிட இருக்கிறோம். ஊழியர்களுக்காக “ஊழியர்களின் பொக்கிஷம்” என்ற புத்தகமும் வெளியிட இருக்கிறோம். இன்னும் பல ஆவிக்குரிய புத்தகங்களும் சுவிசேஷ கைப்பிரதிகளும் வெளியிட்டுள்ளோம்.

தொலைக்காட்சி ஊழியம் (Television Ministries)

1ஆசீர்வாத தொலைக்காட்சியிலும், தமிழன் தொலைக்காட்சியிலும், “அதிகாலை அவர்பாதம்” என்ற தலைப்பில் செய்தி ஒளிப்பரப்பட்டு வந்தது. தற்சமயம் பொருளாதார நெருக்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளியிடப்பட ஜெபியுங்கள்.

 

வாலிபர் ஊழியம் (Youth Ministries)

Youth-Ministry-2

                வாலிபர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்துகிறோம். சென்னையிலும், முதலூரிலும் வருடத்திற்கு ஒரு முறை வாலிபர் முகாம் நடத்துகிறோம். தேவனுடைய நடத்துதல்படி பிற பட்டணங்களிலும், மாநிலங்களிலும் வாலிபர் முகாம் நடத்துகிறோம். வாலிபர்களுக்காக “உனக்கொரு சிநேகிதா;” என்ற கைப்பிரதியும், “பரிசுத்தவாழ்வுக்கு வழிகாட்டி” என்ற புத்தகமும் வெளியிட்டுள்ளோம்.

 

சமுதாயப்பணி (Social Services)

Social-Work

                வருடத்திற்கு ஒரு முறை குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்களை விடுதலையாக்க ஏழு நாட்கள் இலவச முகாம் நடத்துகிறோம். அதினிமித்தம் ஏழ்மையான குடும்பங்களுக்கு ஆதரவளிக்கிறோம். இன்னும் மாதந்தோறும் ஊனமுற்றோருக்கு, விதவைகளுக்கு, ஏழை பிள்ளைகளுக்கு பொருளாதார உதவியை தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்கிறோம்.

 

சுவிசேஷ ஊழியம்  (Evangelism)North-India-Ministry-2

கிராமங்களில் பெண்கள் தெபோராள் குழு மூலம் சுவிசேஷம் அறிவிக்கிறோம். இரவு நேரங்களில் சுவிசேஷ கூட்டங்கள் தமிழகத்திலும், வட இந்தியாவிலும் ஓழுங்குப்படுத்தி இயேசுவையும் அவர் அருளும் மீட்பையும் அருளுகிறோம். கைப்பிரதிகளை அச்சிட்டு சுவிசேஷ தாகமுள்ளவர்களுக்கு கொடுத்து சுவிசேஷப் பணியை தீவிரப்படுத்துகிறோம்.

 

சபை ஸ்தாபித்தல் (Establishment of Churches)

Church-Opening

                தமிழகத்திலும், வட இந்தியாவிலும் தேவனுடைய வீடு (ர்ழரளந ழக புழன) என்ற பெயரில்  சபைகளை ஸ்தாபிக்கிறோம். புதிய இடங்களில் சுவிசேஷம் அறிவித்து இரட்சிப்படைந்த ஜனங்களுக்கு ஆராதனை ஸ்தலங்களை ஏற்படுத்தி கொடுக்கிறோம். முழு நேர பணியாளர்கள் சபை போதகராய் இருக்கிறார்கள்.

 

மாதாந்திர பத்திரிக்கை (Monthly Magazine)

                சுவிசேஷ ஒளி என்ற தலைப்பில் பொருளாதார நிலையை முன்னிட்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியிடுகிறோம்.

Intercession Mission Centre

Prayer Centre with 2000 People sitting capacity is going on under construction in Mudalur Half work has been finished still there are works to be completed .Please Pray for our Intercession Mission Centre Needs.imc