Pastor.Augustin Rajasekar’s Message:

 

கானாவூர் கல்யாணத்தில் நடந்த 5 காரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆண்டவர் தன்னுடைய முதல் அற்புதத்தை திருமண வீட்டில் நடப்பித்து அங்கு இருப்பவர்களை சந்தோஷபட வைப்பதை பார்க்கிறோம். தேவன் நம் குடும்பங்களின் அற்புதங்களை நடப்பிக்கிறவராய் இருக்கிறார். நம்முடைய குடும்பங்களை சந்தோஷப்பட வைக்கிறவராய் இருக்கிறார். குடும்பங்களை இணைக்கிறவர்.நம்மை கணவன் மனைவியாக இணைத்தவர் கர்த்தர். ஆகவே தான் அற்புதங்களையும் நன்மைகளையும் செய்கிறார்.தேவன் குடும்பத்தை இணைத்தபடியாலே பிசாசுக்கு அது பிடிக்காது.பிசாசு குடும்பங்களுக்கு விரோதமாய் பல போராட்டங்களை உண்டு பண்ணுகிறான். குடும்பங்களை பிரிக்க குடும்பங்களை உடைக்க, குடும்பங்களுக்குள் வாக்குவாதங்கள் கொண்டு வர சத்துரு பல விதத்தில் கிரியை செய்து கொண்டிருக்கிறான். ஆனால் தேவன் குடும்பங்களுக்கு சமாதானத்தையும், ஆசிர்வாதத்தையும், நிறைவையும் கொடுக்க தேவன் காத்திருக்கிறார்.
யோவான் 2 ஆம் அதிகாரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.(யோவான் 2:2)
இயேசுவும் அவருடைய சீஷரும் அந்த திருமண வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். வாழ்க்கையிலே எல்லா சூழ்நிலையிலும் இயேசு அழைக்கப்பட வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் இயேசுவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.அதுதான் மிகவும் பிரதான‌ ஒரு காரியம்.அவரை மறந்து எந்தவொரு காரியத்தையும் செய்ய நீங்கள் யோசிக்க கூடாது.அவரை மறந்து எந்தவொரு காரியத்தையும் செய்ய நாம் புறப்படவும் கூடாது. ஆண்டவர் இங்கு நாம் பார்க்கும் போது அவர் அழைக்கப்பட்டிருந்தார்.அங்கு அவர் பிராதானப் பட்டிருந்தார். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்னிலையிலும் அவரை பிராதானப்படுத்த வேண்டும். நான் ஒரு திருமணத்திற்கு சென்றிருக்கும் போது அந்த திருமணத்தை நடத்துகிற அந்த மாப்பிள்ளையோட அப்பா சொன்னார, பிரதர் மேடையில் இருங்கள், நாம் ஜெபிக்க வேண்டும்.ஆண்டவர் வந்து தான் இந்த திருமணத்தை நடத்த வேண்டும். நீங்கள் மேடையில் உட்காருங்கள் என்று சொன்னார். சிறிது நேரத்தில் வந்து சொன்னார் பிரதர் நீங்கள் கீழே உட்கார்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இப்பொழுது தமிழகத்தின் அமைச்சர் ஒருவர் வருகிறார் . அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஒரு ஆள் உயரத்திற்கு மாலையை எடுத்துக் கொண்டு சென்றார்,அந்த நேரத்தில் ஆண்டவரை மறந்து விட்டார். ஆண்டவருடைய பிரசன்னத்தை, ஜெபிப்பதை மறந்து விட்டார். ஒரு மனிதன் ஒரு அமைச்சர் வந்த உடனே அமைச்சரை கனம் பண்ணும் விதமாக அவர் துரிதமாக அவசரமாக செயல் பட்டுக் கொண்டிருந்தார். அந்த சூழ்னிலையிலே அவர் வருகிறார் அவர் வருகிறார் என்று இருக்கும் போது ஒரு செய்தி வந்தது.அவர் வந்து கொண்டிருக்கும் போது திடீரென்று முதலமைச்சர் போன் செய்து உடனே சென்னைக்கு வா என்று சொல்லி அழைத்துவிட்டார். உடனே சென்னைக்கு திரும்பிவிட்டார். ஆகவே திருமணத்துக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டார். அவருக்கு பெரிய ஏமாற்றம், பெரிய துக்கம்.கடைசியாக என்னிடத்தில் வந்து மன்னிப்பு கேட்டார். பிரதர் நாம் ஆண்டவரைத் தான் கனம் பண்ண வேண்டும்.இப்படி மனிதனை நம்பி மனிதனுக்கு மகிமை செலுத்த நான் ஓடினது தவறு, என்னை மன்னித்து கொள்ளுங்கள் என்று சொன்னார். கர்த்தருடைய பிள்ளைகளே எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை கன்ம் பண்ணக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் இயேசுவுக்குரிய ஸ்தானத்தை நாம் கொடுக்க வேண்டும். இயேசுவோ அந்த கல்யாணத்துக்கு பிரதானமாய் அழைக்கப்பட்டிருந்தார்.அவருடைய சீஷர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆகவே அந்த இடத்திலே தேவ பிரசன்னம் காணப்பட்டது. ஆண்டவரை எந்த சூழ்னிலையில் நாம் அழைக்கிறோமோ அந்த சூழ்னிலையில் கிரியை செய்கிறவராய் இருக்கிறார். அந்த சூழ்நிலையை அவர் பொறுப்பெடுத்து கொள்கிறவராய் இருக்கிறார். தேவனுடைய பிள்ளைகளே அவர் இல்லாத விழாக்கள் நமக்கு தேவை இல்லை. நம் வாழ்க்கையில் எல்லா சூழ்னிலையிலும் அவரை பிரதானப்படுத்துவோம். வாழ்க்கையில் எல்லா சூழ்னிலையிலும் அவரை முன்னிருத்துவோம்.ஆகவேதான் தாவீது சொல்கிறான்
எப்பொழுதும் அவரை முன்னிறுத்துவோம். நீங்கள் பயணம் செய்யும் போது அவரை முன்னிறுத்தினால் நமக்கு அனுகூலமான் சூழ்நிலைகளை உண்டு பண்ணுவார். நம்முடைய வாழ்க்கையிலே அவரையே பிரதானப்படுத்த வேண்டும். அவரில்லாதபடி ஒரு வாழ்க்கை வாழ்வோமென்றால் அது வெறுமையாக இருக்கும். அவரில்லாதபடி ஒரு வாழ்க்கையை தெரிந்து கொண்டோமென்றால் அது வெறுமையாகவே இருக்கும். அவரை முன்வைத்து காரியம் செய்வோமென்றால் அங்கு ஒரு குறைவு வந்த போதும் அந்த குறைவு நிச்சயம் நிறைவாக்கப்படும். நாம் பார்க்கும் போது இயேசு அங்கு பிரதானப்பட்டிருந்தார்.இயேசு அங்கு அழைக்கப்பட்டிருந்தார். நம்முடைய ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் அவரை அழைக்க வேண்டும். நாம் அவரை கூப்பிட வேண்டும். 3ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்
 திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.(யோவான் 2:3)
அவரை நோக்குகிற அனுபவம் அங்கு பார்க்கிறோம். வேதம் சொல்லுகிறது. அவரை நோக்கிப் பார்த்தார்கள் பிரகாசம் அடைந்தார்கள்.அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
சங்கீதம் 34:5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
ஒரு சூழ்னிலை வரும்போது யாரை நோக்குகிறோம் என்பது முக்கியம். அவர்கள் நேரே ஓடி சமையல் காரர்களைப் பார்த்திருக்கலாம். சில சூழ்நிலையில் நாம் தேவனை நோக்கி பார்க்காதபடி மனிதனை நோக்கி பார்க்கிறோம். அங்கு தான் தவறு செய்கிறோம். இயேசுவை நோக்கி பார்க்கிறதை அங்கு பார்க்கிறோம். நம் வாழ்க்கையில் குறைவுகள் வரும் போது நாம் நோக்கி பார்க்க வேண்டிய ஒரே ஒருவர் இயேசு மாத்திரம் தான்.
சங்கீதம் 121:1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
சங்கீதம் 121:2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
நாம் நோக்கி பார்த்தால் தான் ஒத்தாசை வரும். நம்முடைய வாழ்க்கையிலே எப்போதும் அவரை நோக்கிப் பார்க்கிற ஒரு அனுபவம் இருக்க வேண்டும்.
சின்ன குறைவோ பெரிய குறைவோ நாம் அவரையே நோக்க வேண்டும்.கண்கள் அவரையே நோக்கி இருக்க வேண்டும். வேலைக்காரர்களின் கண்கள் எஜமானை நோக்கி இருக்கிறது போல எஜமாட்டியின் கண்கள் தன் எஜமாட்டியை  நோக்கி இருக்கிறது போல உங்களுக்கு இரக்கம் செய்யும் வரைக்கும் உங்கள் கண்கள் அவரையே நோக்கி இருக்க வேண்டும். நாம் இந்த நாட்களில் அவரையே நோக்குகிறோமா? பார்க்கிறது வேறு. நோக்குகிறது வேறு. நாம் ஆண்டவரை பார்க்கிறது அல்ல நோக்கி பார்க்க வேண்டும். வேலைக்காரர்களின் கண்கள் எஜமாட்டியை கூலிக்காக நோக்கி பார்க்கிறது போல நோக்கி பார்க்க வேண்டும்.கடமைக்காக பார்ப்பது அல்ல, கடமைக்காக ஜெபிப்பது அல்ல நம் கண்கள் , நம் இருதயம் அவரையே நோக்கி இருக்க வேண்டும். அந்த நோக்கி பார்க்கிற பார்வையிலே விசுவாசம் கலந்து இருக்கிறது.உறுதியாக நமக்கு செய்வார் என்று சொல்லி அந்த பார்வையிலே நம்முடைய விசுவாசமும் கலந்து இருக்கிறது. ஆண்டவர் அந்த பார்வையையும் பார்க்கிறார். அந்த பார்வையோடு இருக்கிற விசுவாசத்தையும் பார்க்கிறார். இயேசுவின் தாய் அவரை பார்த்ததற்கு காரணம் என்ன ? நிச்சயம் அவரிடத்திலிருந்து பதில் வரும் என்ற விசுவாசத்தோடுதான் அவரை நோக்கி பார்த்தார்கள். அவர் சர்வ வல்லமையுள்ளவர். அவரால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமில்லை.அவரிடம் நிச்சயம் இதற்கு பதில் உண்டு என்று மரியாளுக்கு தெரியும்.நம்முடைய வாழ்க்கைக்கு எல்லா காரியத்திற்கும் பதில் உண்டு என்று நாம் விசுவாசிக்க வேண்டும். பணப்பிரச்சனை,வேலை பிரச்சனை, குழந்தை பாக்கியம் , சரீர சுகம், எதுவானாலும் எல்லாவற்றிற்கும் அவரிடம் பதில் உண்டு. வல்லமை உண்டு.
இயேசுவின் தாய் அவரை நோக்கிப் பார்த்து திராட்சை ரசம் இல்லை என்றாள்.
அதற்கு இயேசு, ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.(யோவான்2:4)
நாம் நினைத்தமாத்திரத்திலே தேவன் கொடுத்து விடுவார் என்று நினைப்பதால் தான் நாம் சோர்ந்து போகிறோம். ஆனால் கொடுப்பார். ஏற்ற வேளையில் அவர் கொடுப்பார். ஆண்டவர் சொல்கிறார் ” வேளை இன்னும் வரவில்லை”. ஒரு சின்ன காரியமாக இருந்தாலும் தேவன் அதற்கு என்று ஒரு வேளையை வைத்திருக்கிறார். தேவன் அதினதின் காலத்தில் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்கிறார். அந்த வேலையில் கண்டிப்பாக அந்த காரியத்தை செய்வார். அவரிடத்தில் காத்திருக்கிற பிள்ளைகள் அவருடைய வேலைக்காக காத்திருக்க வேண்டும். அந்த வேலை வரும் வரை காத்திருக்க வேண்டும். தாவீது யுத்தத்திற்கு செல்லும் போது தேவனை நோக்கி அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறான். தேவன் உத்தரவு கொடுத்தால் தான் யுத்தத்திற்கு செல்கிறான். எப்பொழுது போக வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அவர் முசுக் கொட்டை செடியின் நுனியில் ஒரு இரைச்சல் கேட்கும்.அந்த இரைச்சலின் சத்தத்தை கேட்கும் போது நீ புறப்பட்டு போ. அப்பொழுது கர்த்தர் உனக்கு முன்பாக புறப்பட்டு இருப்பார். அந்த செடியின் நுனியில் சத்தம் வருகிற வரைக்கும் தாவீது காத்திருக்க வேண்டியதாயிற்று. தேவனுடைய அற்புதங்களுக்காய் தேவப்பிள்ளைகள் காத்திருக்க வேண்டும். சோர்ந்து போகாமல் காத்திருக்க வேண்டும். அவிசுவாசப்டாமல் காத்திருக்க வேண்டும். ஸ்தோத்திரத்தோடு மகிழ்ச்சியோடு காத்திருக்க வேண்டும். நிச்சயம் அவர் இரங்குவார். நிச்சயம் அவர் வேலையின் படி எனக்கு அற்புதம் செய்வார். ஆபிராக‌முக்கு அந்த வேலை மிகவும் தாமதித்தது. 25 வருடங்கள் காத்திருந்தான்.பெற்றுக் கொண்டான்.
5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.(யோவான் 2:5)
அவருடைய வேலை வரும் போது சில நடத்துதலை தேவன் உண்டாக்குவார். அதன் படி நாம் செய்ய வேண்டும். ஒரு அற்புதத்திற்கு முன்பாக ஒரு நடத்துதல் அங்கு உண்டாகிறது. அந்த நடத்துதலை அங்கு பார்க்கிறோம். நம் தேவன் நமக்கு ஆலோசனைக் கொடுக்கிறார். அவர் ஆலோசனைக் கர்த்தராய் விளங்குகிறார். அவருடைய ஆலோசனையின் படி நடத்துகிறார். ஒவ்வொரு காரியத்திலும் மறைவாயிருந்து காரியத்தை நிறைவேற்றுவார். ஆனாலும் அவர் நமக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து அவருடைய ஆலோசனையின் படி நடத்துவார்.
அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள். ஆம் நம்முடைய காதுகள் அவர் சொல்கிறதை கேட்பதற்கு கவனமாயிருக்க வேண்டும்.அவர் சொல்கிறதை கேட்பதற்கு மிகுந்த கவனமாயிருக்கும் போது அற்புதம் நடக்கும். சமீபத்தில் பெருமனை பகுதியில் உள்ள கிராமத்திற்கு ஊழியத்திற்கு சென்றிருந்தேன். அங்குள்ள ஒரு வயதான தாய் ஒரு வேடிக்கையான காரியத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மிகுந்த கால் வலி. ஒரு நாள் கர்த்தருடைய சமூகத்தில் இதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு சத்தம் கேட்டதாம். நாட்டு வாழைப்பழம் வாங்கி தோழோடு சாப்பிடு, சாப்பிட்டால் உனக்கு சுகம் கிடைக்கும் என்று அந்த குரல் ஒலித்தது. இந்த வயதான தாய் கடைக்கு சென்று பழம் வாங்கி தோழோடு சாப்பிட்டார்களாம். அன்றையோடு அந்த வலியும் மறைந்து விட்டதாம். இன்றைக்கு வரைக்கும் அந்த தாய் சுகமாய் இருக்கிறார்களாம். கர்த்தருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் கர்த்தர் ஆலோசனை சொல்கிறார். அந்த ஆலோசனையைக் கேட்க வேண்டும். அந்த ஆலோசனைக்கு கீழ்ப்படிய வேண்டும். அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள். நீங்களாக ஒரு காரியத்தை செய்யும்படி தீர்மானிக்காதீர்கள்.
ஆலோசனைக்கு காத்திருக்க வேண்டும். அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதன் படி செய்யுங்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் தேவன் நடத்துவார். ஒரு குருடனுக்கு மண்ணை எடுத்து பூசி சீலோம் குளத்தில் போய் கழுவு என்கிறார். பர்திமேயு குருடனைப் பார்த்து நீ பார்வை அடைவாயாக என்றார். பிறவியிலே பேச முடியாதவனை ஊருக்கு வெளியே அழைத்துக்கொண்டு போய் எப்பத்தா என்று சொல்லி ஆண்டவர் அங்கு அவனைத் தொட்டு குணமாக்குகிறார். இப்படியாக ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் நடத்துவார். உங்களுக்காகவும் ஒரு விதமான வழியை வைத்திருப்பார். அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
எசேக்கியாவிற்கு நீ சுகமாகி விடுவாய் என்று கர்த்தர் சொல்கிறார், ஆனால் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தர் ஒரு காரியத்தை செய்கிறார். அத்தி பழ அடையை கொண்டு போய் வியாதிப்பட்ட அந்த பிளவையின் மேல் போடு என்று சொல்கிறார். அதே போல செய்த உடன்,  உடனே எசேக்கியாவுக்கு சுகம் கிடைத்தது.  ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் கர்த்தர் நடத்துவார். உங்களுக்கு இந்த நாளில் அற்புதம் நடக்கும் படியாக ஆலோசனைகளைக் கொடுப்பார்.
யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.(யோவான் 2:6)
இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.(யோவான் 2:7)
அவர் தண்ணீரை நிரப்ப சொல்கிறார். அங்கு ஒரு கீழ்ப்படிதலை கர்த்தர் எதிபார்க்கிறார். தண்ணீர் நிரப்புங்கள் என்று அவர் சொன்ன மாத்திரத்திலே எந்த கேள்வியும் எழுப்பாதபடி அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். ஒவ்வொரு ஜாடியும் மூன்று குடம் பிடிக்குமாம். ஆனால் அவர்கள் நிறைய நிரப்பினார்கள். இங்கு நாம் அவர்களிடத்திலே கீழ்படிதலையும்,விசுவாசத்தையும் பார்க்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் விசுவாசம் நிறைய இருக்க வேண்டும். அதைத்தான் கர்த்தர் விரும்புகிறார்.சோம்பேறிகளுக்கு கர்த்தர் அற்புதம் செய்ய மாட்டார். ஒரு சகோதரர் அவருடைய வாய் பாதிக்கப்பட்டு அவருடைய வாயிலே பக்கவாதம் போல வந்து வாய் கோணிப்போய் இருந்தது. ப்ளாஸ்டர் போட்டிருந்தார்கள். நான் தற்செயலாக ஜெபிக்க சென்றிருந்தேன். ஜெபிக்க,ஜெபிக்க கர்த்தர் ஒரு நடத்துதலைக் கொடுத்தார். அந்த ப்ளாஸ்டரை எடுத்துப் போடு , நான் அற்புதம் செய்கிறேன் என்று சொன்னார். எனக்கு ஒரு பயம் வந்தது. அந்த  ப்ளாஸ்டரை எடுத்துவிட்டால் அவருடைய முகம் எப்படி இருக்கும் என்ற பயம் எனக்கு உண்டானது.ஆனால் தேவன் சொன்னதுக்கு கீழ்படிந்து அந்த ப்ளாஸ்டரை எடுத்துப் போட்டேன். ஜெபித்து முடித்த பின்பு அவருடைய முகம் சரியாய் காணப்பட்டது.கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆண்டவருடைய பிள்ளைகளே நீங்கள் கிரியை செய்ய வேண்டும். கிரியை செய்யாமல் அற்புதம் நடக்காது. நிரப்புங்கள் என்ற சொன்ன உடனே அவர்கள் நிறைய நிரப்பினார்கள். கர்த்தர் ஒன்று செய்ய சொல்லும்போது உங்களிடம் அதைக்குறித்த அவ்விசுவாசம் வேண்டாம். 100 வயதாய் இருக்கும் உனக்கு குழந்தை இருக்கும் என்று  ஆபிரகாமுக்கு கர்த்தர் வாக்கு கொடுக்கிறார்.  சாராள் கர்ப்பம் செத்து போனதை அவன் நினைத்து பார்க்க வில்லை. கர்த்தருடைய வாக்குதத்தின் மீது விசுவாசமாய் இருந்தான். 100 வயதிலே அவர்கள் விசுவாசத்தின் கிரியை நடப்பித்து இருக்கிறார்கள். அங்கு கர்த்தர் ஈசாக்கை கொடுத்தார். உங்களுடைய குடும்பத்திலும் விசுவாசமுள்ள கிரியைகளை செய்ய வேண்டும். விசுவாசத்தோடு உங்கள் காரியங்கள் நடப்பிக்கப் பட வேண்டும். அந்த வேலைக்காரர்களுக்குள்ளே அப்படிப்பட்ட விசுவாசம் இருந்தது. ஆகவே தான் அவர்கள் நிறைய நிரப்பினார்கள். உங்கள் விசுவாசம் பூரணமாய் இருக்க வேண்டும்.
8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார், அவர்கள் கொண்டுபோனார்கள்.(யோவான் 2:8)
ஆண்டவருடைய வேலை வந்த பிறகு தாமதமே கிடையாது. உடனே பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அந்த வேலைக்காரர்கள் உடனே பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போனார்கள். அந்த வேலைக்காரர்கள் சந்தேகப்படவில்லை. இந்த தண்ணீர் இரசமாய் மாறி இருக்குமா என்று அவர்கள் கேள்வி கேட்கவில்லை. விசுவாசத்தோடு அதை மொண்டு கொண்டு போனார்கள். கர்த்தர் உங்களிடத்தில் ஒன்று சொன்னால் உடனே கீழ்ப்படிய வேண்டும். என்னுடைய வாழ்க்கையிலும் என்ன்னிடத்தில் கர்த்தர் ஒன்று சொல்லிட்டால் நான் அதை குறித்து ஒன்றுமே யோசியாமல் அவர் சொன்னதை செய்து முடிப்பேன். என் வீட்டிற்கு ஊழியக்காரர்கள் வருவார்கள். கர்த்தர் என்னிடத்தில் உள்ளதை அவர்களிடத்தில் கொடுக்க சொல்லுவார். நான் உடனே கொடுப்பேன்.நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசிப்பதே இல்லை. எனக்கு தெரியும் அதற்கு பின்பாக கர்த்தர் எனக்கு ஒரு காரியத்தை ஆயத்தம் செய்து வைத்திருப்பார். கர்ததருடைய பிள்ளைகளே அவருடைய வார்த்தைக்கு சந்தேகப்படாமல் உடனே கீழ்ப்படிய வேண்டும்.முந்தின இரசத்தைப் பார்க்கிலும் பிந்தின இரசம் மிகுந்த சுவை மிகுந்ததாய் இருந்தது.
 இந்த இரசத்தை எங்கே வைத்திருந்தீர்கள் என்று பந்திவிசாரிப்புக்கானே ஆச்சரியப்படுகிறான்.
சாதரணமாக பிள்ளைகள் பெறுவது வேறு, ஆனால் ஜெபித்து பெற்ற பிள்ளைகள் மிகுந்த விசேஷமானவர்களாய் இருப்பார்கள். அதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் எல்லாம் சோர்ந்து போகக் கூடாது. உங்களுடைய பிள்ளைகளெல்லாம் விசேஷமான பிள்ளைகளாய் இருக்கப் போகிறார்கள் . தேவ திட்டம் நிறைவேற்ற பிறந்த பிள்ளைகளாய் இருக்கப் போகிறார்கள்.அந்தப் பிள்ளைகளுக்காய் கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும். காத்திருந்து நன்மைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளும் போது அது சிறந்ததாக இருக்கும். விசேஷமானதாய்  இருக்கும். எப்பொழுதுள்ள இரசத்தைக் காட்டிலும் பிந்தின திராட்சை இரசம் மிகுந்த சுவை மிகுந்ததாய் இருந்தது. கர்த்தருடைய கரத்திலிருந்து வந்ததால் மிகுந்த சுவை மிகுந்ததாய் இருந்தது. காத்திருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளும் போது அதில் உங்கள் கண்கள் ஆச்சரியப்படும்  அளவுக்கு, மற்றவர்கள் கண்டு வியக்கும் அளவுக்கு அது மிகுந்த விசேஷ மானதாய் இருக்கும். த்தில் நடந்த 5 காரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆண்டவர் தன்னுடைய முதல் அற்புதத்தை திருமண வீட்டில் நடப்பித்து அங்கு இருப்பவர்களை சந்தோஷபட வைப்பதை பார்க்கிறோம். தேவன் நம் குடும்பங்களின் அற்புதங்களை நடப்பிக்கிறவராய் இருக்கிறார். நம்முடைய குடும்பங்களை சந்தோஷப்பட வைக்கிறவராய் இருக்கிறார். குடும்பங்களை இணைக்கிறவர்.நம்மை கணவன் மனைவியாக இணைத்தவர் கர்த்தர். ஆகவே தான் அற்புதங்களையும் நன்மைகளையும் செய்கிறார்.தேவன் குடும்பத்தை இணைத்தபடியாலே பிசாசுக்கு அது பிடிக்காது.பிசாசு குடும்பங்களுக்கு விரோதமாய் பல போராட்டங்களை உண்டு பண்ணுகிறான். குடும்பங்களை பிரிக்க குடும்பங்களை உடைக்க, குடும்பங்களுக்குள் வாக்குவாதங்கள் கொண்டு வர சத்துரு பல விதத்தில் கிரியை செய்து கொண்டிருக்கிறான். ஆனால் தேவன் குடும்பங்களுக்கு சமாதானத்தையும், ஆசிர்வாதத்தையும், நிறைவையும் கொடுக்க தேவன் காத்திருக்கிறார்.
யோவான் 2 ஆம் அதிகாரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.(யோவான் 2:2)
இயேசுவும் அவருடைய சீஷரும் அந்த திருமண வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். வாழ்க்கையிலே எல்லா சூழ்நிலையிலும் இயேசு அழைக்கப்பட வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் இயேசுவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.அதுதான் மிகவும் பிரதான‌ ஒரு காரியம்.அவரை மறந்து எந்தவொரு காரியத்தையும் செய்ய நீங்கள் யோசிக்க கூடாது.அவரை மறந்து எந்தவொரு காரியத்தையும் செய்ய நாம் புறப்படவும் கூடாது. ஆண்டவர் இங்கு நாம் பார்க்கும் போது அவர் அழைக்கப்பட்டிருந்தார்.அங்கு அவர் பிராதானப் பட்டிருந்தார். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்னிலையிலும் அவரை பிராதானப்படுத்த வேண்டும். நான் ஒரு திருமணத்திற்கு சென்றிருக்கும் போது அந்த திருமணத்தை நடத்துகிற அந்த மாப்பிள்ளையோட அப்பா சொன்னார, பிரதர் மேடையில் இருங்கள், நாம் ஜெபிக்க வேண்டும்.ஆண்டவர் வந்து தான் இந்த திருமணத்தை நடத்த வேண்டும். நீங்கள் மேடையில் உட்காருங்கள் என்று சொன்னார். சிறிது நேரத்தில் வந்து சொன்னார் பிரதர் நீங்கள் கீழே உட்கார்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இப்பொழுது தமிழகத்தின் அமைச்சர் ஒருவர் வருகிறார் . அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஒரு ஆள் உயரத்திற்கு மாலையை எடுத்துக் கொண்டு சென்றார்,அந்த நேரத்தில் ஆண்டவரை மறந்து விட்டார். ஆண்டவருடைய பிரசன்னத்தை, ஜெபிப்பதை மறந்து விட்டார். ஒரு மனிதன் ஒரு அமைச்சர் வந்த உடனே அமைச்சரை கனம் பண்ணும் விதமாக அவர் துரிதமாக அவசரமாக செயல் பட்டுக் கொண்டிருந்தார். அந்த சூழ்னிலையிலே அவர் வருகிறார் அவர் வருகிறார் என்று இருக்கும் போது ஒரு செய்தி வந்தது.அவர் வந்து கொண்டிருக்கும் போது திடீரென்று முதலமைச்சர் போன் செய்து உடனே சென்னைக்கு வா என்று சொல்லி அழைத்துவிட்டார். உடனே சென்னைக்கு திரும்பிவிட்டார். ஆகவே திருமணத்துக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டார். அவருக்கு பெரிய ஏமாற்றம், பெரிய துக்கம்.கடைசியாக என்னிடத்தில் வந்து மன்னிப்பு கேட்டார். பிரதர் நாம் ஆண்டவரைத் தான் கனம் பண்ண வேண்டும்.இப்படி மனிதனை நம்பி மனிதனுக்கு மகிமை செலுத்த நான் ஓடினது தவறு, என்னை மன்னித்து கொள்ளுங்கள் என்று சொன்னார். கர்த்தருடைய பிள்ளைகளே எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை கன்ம் பண்ணக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் இயேசுவுக்குரிய ஸ்தானத்தை நாம் கொடுக்க வேண்டும். இயேசுவோ அந்த கல்யாணத்துக்கு பிரதானமாய் அழைக்கப்பட்டிருந்தார்.அவருடைய சீஷர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆகவே அந்த இடத்திலே தேவ பிரசன்னம் காணப்பட்டது. ஆண்டவரை எந்த சூழ்னிலையில் நாம் அழைக்கிறோமோ அந்த சூழ்னிலையில் கிரியை செய்கிறவராய் இருக்கிறார். அந்த சூழ்நிலையை அவர் பொறுப்பெடுத்து கொள்கிறவராய் இருக்கிறார். தேவனுடைய பிள்ளைகளே அவர் இல்லாத விழாக்கள் நமக்கு தேவை இல்லை. நம் வாழ்க்கையில் எல்லா சூழ்னிலையிலும் அவரை பிரதானப்படுத்துவோம். வாழ்க்கையில் எல்லா சூழ்னிலையிலும் அவரை முன்னிருத்துவோம்.ஆகவேதான் தாவீது சொல்கிறான்
எப்பொழுதும் அவரை முன்னிறுத்துவோம். நீங்கள் பயணம் செய்யும் போது அவரை முன்னிறுத்தினால் நமக்கு அனுகூலமான் சூழ்நிலைகளை உண்டு பண்ணுவார். நம்முடைய வாழ்க்கையிலே அவரையே பிரதானப்படுத்த வேண்டும். அவரில்லாதபடி ஒரு வாழ்க்கை வாழ்வோமென்றால் அது வெறுமையாக இருக்கும். அவரில்லாதபடி ஒரு வாழ்க்கையை தெரிந்து கொண்டோமென்றால் அது வெறுமையாகவே இருக்கும். அவரை முன்வைத்து காரியம் செய்வோமென்றால் அங்கு ஒரு குறைவு வந்த போதும் அந்த குறைவு நிச்சயம் நிறைவாக்கப்படும். நாம் பார்க்கும் போது இயேசு அங்கு பிரதானப்பட்டிருந்தார்.இயேசு அங்கு அழைக்கப்பட்டிருந்தார். நம்முடைய ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் அவரை அழைக்க வேண்டும். நாம் அவரை கூப்பிட வேண்டும். 3ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்
 திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.(யோவான் 2:3)
அவரை நோக்குகிற அனுபவம் அங்கு பார்க்கிறோம். வேதம் சொல்லுகிறது. அவரை நோக்கிப் பார்த்தார்கள் பிரகாசம் அடைந்தார்கள்.அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
சங்கீதம் 34:5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
ஒரு சூழ்னிலை வரும்போது யாரை நோக்குகிறோம் என்பது முக்கியம். அவர்கள் நேரே ஓடி சமையல் காரர்களைப் பார்த்திருக்கலாம். சில சூழ்நிலையில் நாம் தேவனை நோக்கி பார்க்காதபடி மனிதனை நோக்கி பார்க்கிறோம். அங்கு தான் தவறு செய்கிறோம். இயேசுவை நோக்கி பார்க்கிறதை அங்கு பார்க்கிறோம். நம் வாழ்க்கையில் குறைவுகள் வரும் போது நாம் நோக்கி பார்க்க வேண்டிய ஒரே ஒருவர் இயேசு மாத்திரம் தான்.
சங்கீதம் 121:1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
சங்கீதம் 121:2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
நாம் நோக்கி பார்த்தால் தான் ஒத்தாசை வரும். நம்முடைய வாழ்க்கையிலே எப்போதும் அவரை நோக்கிப் பார்க்கிற ஒரு அனுபவம் இருக்க வேண்டும்.
சின்ன குறைவோ பெரிய குறைவோ நாம் அவரையே நோக்க வேண்டும்.கண்கள் அவரையே நோக்கி இருக்க வேண்டும். வேலைக்காரர்களின் கண்கள் எஜமானை நோக்கி இருக்கிறது போல எஜமாட்டியின் கண்கள் தன் எஜமாட்டியை  நோக்கி இருக்கிறது போல உங்களுக்கு இரக்கம் செய்யும் வரைக்கும் உங்கள் கண்கள் அவரையே நோக்கி இருக்க வேண்டும். நாம் இந்த நாட்களில் அவரையே நோக்குகிறோமா? பார்க்கிறது வேறு. நோக்குகிறது வேறு. நாம் ஆண்டவரை பார்க்கிறது அல்ல நோக்கி பார்க்க வேண்டும். வேலைக்காரர்களின் கண்கள் எஜமாட்டியை கூலிக்காக நோக்கி பார்க்கிறது போல நோக்கி பார்க்க வேண்டும்.கடமைக்காக பார்ப்பது அல்ல, கடமைக்காக ஜெபிப்பது அல்ல நம் கண்கள் , நம் இருதயம் அவரையே நோக்கி இருக்க வேண்டும். அந்த நோக்கி பார்க்கிற பார்வையிலே விசுவாசம் கலந்து இருக்கிறது.உறுதியாக நமக்கு செய்வார் என்று சொல்லி அந்த பார்வையிலே நம்முடைய விசுவாசமும் கலந்து இருக்கிறது. ஆண்டவர் அந்த பார்வையையும் பார்க்கிறார். அந்த பார்வையோடு இருக்கிற விசுவாசத்தையும் பார்க்கிறார். இயேசுவின் தாய் அவரை பார்த்ததற்கு காரணம் என்ன ? நிச்சயம் அவரிடத்திலிருந்து பதில் வரும் என்ற விசுவாசத்தோடுதான் அவரை நோக்கி பார்த்தார்கள். அவர் சர்வ வல்லமையுள்ளவர். அவரால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமில்லை.அவரிடம் நிச்சயம் இதற்கு பதில் உண்டு என்று மரியாளுக்கு தெரியும்.நம்முடைய வாழ்க்கைக்கு எல்லா காரியத்திற்கும் பதில் உண்டு என்று நாம் விசுவாசிக்க வேண்டும். பணப்பிரச்சனை,வேலை பிரச்சனை, குழந்தை பாக்கியம் , சரீர சுகம், எதுவானாலும் எல்லாவற்றிற்கும் அவரிடம் பதில் உண்டு. வல்லமை உண்டு.
இயேசுவின் தாய் அவரை நோக்கிப் பார்த்து திராட்சை ரசம் இல்லை என்றாள்.
அதற்கு இயேசு, ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.(யோவான்2:4)
நாம் நினைத்தமாத்திரத்திலே தேவன் கொடுத்து விடுவார் என்று நினைப்பதால் தான் நாம் சோர்ந்து போகிறோம். ஆனால் கொடுப்பார். ஏற்ற வேளையில் அவர் கொடுப்பார். ஆண்டவர் சொல்கிறார் ” வேளை இன்னும் வரவில்லை”. ஒரு சின்ன காரியமாக இருந்தாலும் தேவன் அதற்கு என்று ஒரு வேளையை வைத்திருக்கிறார். தேவன் அதினதின் காலத்தில் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்கிறார். அந்த வேலையில் கண்டிப்பாக அந்த காரியத்தை செய்வார். அவரிடத்தில் காத்திருக்கிற பிள்ளைகள் அவருடைய வேலைக்காக காத்திருக்க வேண்டும். அந்த வேலை வரும் வரை காத்திருக்க வேண்டும். தாவீது யுத்தத்திற்கு செல்லும் போது தேவனை நோக்கி அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறான். தேவன் உத்தரவு கொடுத்தால் தான் யுத்தத்திற்கு செல்கிறான். எப்பொழுது போக வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அவர் முசுக் கொட்டை செடியின் நுனியில் ஒரு இரைச்சல் கேட்கும்.அந்த இரைச்சலின் சத்தத்தை கேட்கும் போது நீ புறப்பட்டு போ. அப்பொழுது கர்த்தர் உனக்கு முன்பாக புறப்பட்டு இருப்பார். அந்த செடியின் நுனியில் சத்தம் வருகிற வரைக்கும் தாவீது காத்திருக்க வேண்டியதாயிற்று. தேவனுடைய அற்புதங்களுக்காய் தேவப்பிள்ளைகள் காத்திருக்க வேண்டும். சோர்ந்து போகாமல் காத்திருக்க வேண்டும். அவிசுவாசப்டாமல் காத்திருக்க வேண்டும். ஸ்தோத்திரத்தோடு மகிழ்ச்சியோடு காத்திருக்க வேண்டும். நிச்சயம் அவர் இரங்குவார். நிச்சயம் அவர் வேலையின் படி எனக்கு அற்புதம் செய்வார். ஆபிராக‌முக்கு அந்த வேலை மிகவும் தாமதித்தது. 25 வருடங்கள் காத்திருந்தான்.பெற்றுக் கொண்டான்.
5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.(யோவான் 2:5)
அவருடைய வேலை வரும் போது சில நடத்துதலை தேவன் உண்டாக்குவார். அதன் படி நாம் செய்ய வேண்டும். ஒரு அற்புதத்திற்கு முன்பாக ஒரு நடத்துதல் அங்கு உண்டாகிறது. அந்த நடத்துதலை அங்கு பார்க்கிறோம். நம் தேவன் நமக்கு ஆலோசனைக் கொடுக்கிறார். அவர் ஆலோசனைக் கர்த்தராய் விளங்குகிறார். அவருடைய ஆலோசனையின் படி நடத்துகிறார். ஒவ்வொரு காரியத்திலும் மறைவாயிருந்து காரியத்தை நிறைவேற்றுவார். ஆனாலும் அவர் நமக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து அவருடைய ஆலோசனையின் படி நடத்துவார்.
அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள். ஆம் நம்முடைய காதுகள் அவர் சொல்கிறதை கேட்பதற்கு கவனமாயிருக்க வேண்டும்.அவர் சொல்கிறதை கேட்பதற்கு மிகுந்த கவனமாயிருக்கும் போது அற்புதம் நடக்கும். சமீபத்தில் பெருமனை பகுதியில் உள்ள கிராமத்திற்கு ஊழியத்திற்கு சென்றிருந்தேன். அங்குள்ள ஒரு வயதான தாய் ஒரு வேடிக்கையான காரியத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மிகுந்த கால் வலி. ஒரு நாள் கர்த்தருடைய சமூகத்தில் இதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு சத்தம் கேட்டதாம். நாட்டு வாழைப்பழம் வாங்கி தோழோடு சாப்பிடு, சாப்பிட்டால் உனக்கு சுகம் கிடைக்கும் என்று அந்த குரல் ஒலித்தது. இந்த வயதான தாய் கடைக்கு சென்று பழம் வாங்கி தோழோடு சாப்பிட்டார்களாம். அன்றையோடு அந்த வலியும் மறைந்து விட்டதாம். இன்றைக்கு வரைக்கும் அந்த தாய் சுகமாய் இருக்கிறார்களாம். கர்த்தருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் கர்த்தர் ஆலோசனை சொல்கிறார். அந்த ஆலோசனையைக் கேட்க வேண்டும். அந்த ஆலோசனைக்கு கீழ்ப்படிய வேண்டும். அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள். நீங்களாக ஒரு காரியத்தை செய்யும்படி தீர்மானிக்காதீர்கள்.
ஆலோசனைக்கு காத்திருக்க வேண்டும். அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதன் படி செய்யுங்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் தேவன் நடத்துவார். ஒரு குருடனுக்கு மண்ணை எடுத்து பூசி சீலோம் குளத்தில் போய் கழுவு என்கிறார். பர்திமேயு குருடனைப் பார்த்து நீ பார்வை அடைவாயாக என்றார். பிறவியிலே பேச முடியாதவனை ஊருக்கு வெளியே அழைத்துக்கொண்டு போய் எப்பத்தா என்று சொல்லி ஆண்டவர் அங்கு அவனைத் தொட்டு குணமாக்குகிறார். இப்படியாக ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் நடத்துவார். உங்களுக்காகவும் ஒரு விதமான வழியை வைத்திருப்பார். அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
எசேக்கியாவிற்கு நீ சுகமாகி விடுவாய் என்று கர்த்தர் சொல்கிறார், ஆனால் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தர் ஒரு காரியத்தை செய்கிறார். அத்தி பழ அடையை கொண்டு போய் வியாதிப்பட்ட அந்த பிளவையின் மேல் போடு என்று சொல்கிறார். அதே போல செய்த உடன்,  உடனே எசேக்கியாவுக்கு சுகம் கிடைத்தது.  ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் கர்த்தர் நடத்துவார். உங்களுக்கு இந்த நாளில் அற்புதம் நடக்கும் படியாக ஆலோசனைகளைக் கொடுப்பார்.
யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.(யோவான் 2:6)
இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.(யோவான் 2:7)
அவர் தண்ணீரை நிரப்ப சொல்கிறார். அங்கு ஒரு கீழ்ப்படிதலை கர்த்தர் எதிபார்க்கிறார். தண்ணீர் நிரப்புங்கள் என்று அவர் சொன்ன மாத்திரத்திலே எந்த கேள்வியும் எழுப்பாதபடி அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். ஒவ்வொரு ஜாடியும் மூன்று குடம் பிடிக்குமாம். ஆனால் அவர்கள் நிறைய நிரப்பினார்கள். இங்கு நாம் அவர்களிடத்திலே கீழ்படிதலையும்,விசுவாசத்தையும் பார்க்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் விசுவாசம் நிறைய இருக்க வேண்டும். அதைத்தான் கர்த்தர் விரும்புகிறார்.சோம்பேறிகளுக்கு கர்த்தர் அற்புதம் செய்ய மாட்டார். ஒரு சகோதரர் அவருடைய வாய் பாதிக்கப்பட்டு அவருடைய வாயிலே பக்கவாதம் போல வந்து வாய் கோணிப்போய் இருந்தது. ப்ளாஸ்டர் போட்டிருந்தார்கள். நான் தற்செயலாக ஜெபிக்க சென்றிருந்தேன். ஜெபிக்க,ஜெபிக்க கர்த்தர் ஒரு நடத்துதலைக் கொடுத்தார். அந்த ப்ளாஸ்டரை எடுத்துப் போடு , நான் அற்புதம் செய்கிறேன் என்று சொன்னார். எனக்கு ஒரு பயம் வந்தது. அந்த  ப்ளாஸ்டரை எடுத்துவிட்டால் அவருடைய முகம் எப்படி இருக்கும் என்ற பயம் எனக்கு உண்டானது.ஆனால் தேவன் சொன்னதுக்கு கீழ்படிந்து அந்த ப்ளாஸ்டரை எடுத்துப் போட்டேன். ஜெபித்து முடித்த பின்பு அவருடைய முகம் சரியாய் காணப்பட்டது.கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆண்டவருடைய பிள்ளைகளே நீங்கள் கிரியை செய்ய வேண்டும். கிரியை செய்யாமல் அற்புதம் நடக்காது. நிரப்புங்கள் என்ற சொன்ன உடனே அவர்கள் நிறைய நிரப்பினார்கள். கர்த்தர் ஒன்று செய்ய சொல்லும்போது உங்களிடம் அதைக்குறித்த அவ்விசுவாசம் வேண்டாம். 100 வயதாய் இருக்கும் உனக்கு குழந்தை இருக்கும் என்று  ஆபிரகாமுக்கு கர்த்தர் வாக்கு கொடுக்கிறார்.  சாராள் கர்ப்பம் செத்து போனதை அவன் நினைத்து பார்க்க வில்லை. கர்த்தருடைய வாக்குதத்தின் மீது விசுவாசமாய் இருந்தான். 100 வயதிலே அவர்கள் விசுவாசத்தின் கிரியை நடப்பித்து இருக்கிறார்கள். அங்கு கர்த்தர் ஈசாக்கை கொடுத்தார். உங்களுடைய குடும்பத்திலும் விசுவாசமுள்ள கிரியைகளை செய்ய வேண்டும். விசுவாசத்தோடு உங்கள் காரியங்கள் நடப்பிக்கப் பட வேண்டும். அந்த வேலைக்காரர்களுக்குள்ளே அப்படிப்பட்ட விசுவாசம் இருந்தது. ஆகவே தான் அவர்கள் நிறைய நிரப்பினார்கள். உங்கள் விசுவாசம் பூரணமாய் இருக்க வேண்டும்.
8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார், அவர்கள் கொண்டுபோனார்கள்.(யோவான் 2:8)
ஆண்டவருடைய வேலை வந்த பிறகு தாமதமே கிடையாது. உடனே பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அந்த வேலைக்காரர்கள் உடனே பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போனார்கள். அந்த வேலைக்காரர்கள் சந்தேகப்படவில்லை. இந்த தண்ணீர் இரசமாய் மாறி இருக்குமா என்று அவர்கள் கேள்வி கேட்கவில்லை. விசுவாசத்தோடு அதை மொண்டு கொண்டு போனார்கள். கர்த்தர் உங்களிடத்தில் ஒன்று சொன்னால் உடனே கீழ்ப்படிய வேண்டும். என்னுடைய வாழ்க்கையிலும் என்ன்னிடத்தில் கர்த்தர் ஒன்று சொல்லிட்டால் நான் அதை குறித்து ஒன்றுமே யோசியாமல் அவர் சொன்னதை செய்து முடிப்பேன். என் வீட்டிற்கு ஊழியக்காரர்கள் வருவார்கள். கர்த்தர் என்னிடத்தில் உள்ளதை அவர்களிடத்தில் கொடுக்க சொல்லுவார். நான் உடனே கொடுப்பேன்.நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசிப்பதே இல்லை. எனக்கு தெரியும் அதற்கு பின்பாக கர்த்தர் எனக்கு ஒரு காரியத்தை ஆயத்தம் செய்து வைத்திருப்பார். கர்ததருடைய பிள்ளைகளே அவருடைய வார்த்தைக்கு சந்தேகப்படாமல் உடனே கீழ்ப்படிய வேண்டும்.முந்தின இரசத்தைப் பார்க்கிலும் பிந்தின இரசம் மிகுந்த சுவை மிகுந்ததாய் இருந்தது.
 இந்த இரசத்தை எங்கே வைத்திருந்தீர்கள் என்று பந்திவிசாரிப்புக்கானே ஆச்சரியப்படுகிறான்.
சாதரணமாக பிள்ளைகள் பெறுவது வேறு, ஆனால் ஜெபித்து பெற்ற பிள்ளைகள் மிகுந்த விசேஷமானவர்களாய் இருப்பார்கள். அதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் எல்லாம் சோர்ந்து போகக் கூடாது. உங்களுடைய பிள்ளைகளெல்லாம் விசேஷமான பிள்ளைகளாய் இருக்கப் போகிறார்கள் . தேவ திட்டம் நிறைவேற்ற பிறந்த பிள்ளைகளாய் இருக்கப் போகிறார்கள்.அந்தப் பிள்ளைகளுக்காய் கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும். காத்திருந்து நன்மைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளும் போது அது சிறந்ததாக இருக்கும். விசேஷமானதாய்  இருக்கும். எப்பொழுதுள்ள இரசத்தைக் காட்டிலும் பிந்தின திராட்சை இரசம் மிகுந்த சுவை மிகுந்ததாய் இருந்தது. கர்த்தருடைய கரத்திலிருந்து வந்ததால் மிகுந்த சுவை மிகுந்ததாய் இருந்தது. காத்திருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளும் போது அதில் உங்கள் கண்கள் ஆச்சரியப்படும்  அளவுக்கு, மற்றவர்கள் கண்டு வியக்கும் அளவுக்கு அது மிகுந்த விசேஷ மானதாய் இருக்கும். Amen.