1. இந்திய தேசத்தில் உள்ள 50 மில்லியன் பெண்களுக்காக (புத்தியுள்ள, பரிசுத்தமுள்ள பெண்களாக தேவனை அறியும் அறிவை அடைய)
  2. மன அழுத்தம், பாரம், கவலை இவைகள் நிமித்தம் தூக்கத்தை, சுகத்தை இழப்போர் கர்த்தர் பாதம் காத்திருந்து இளைப்பாறுதல் அடைய.
  3. இந்தியாவில் பருவமழை தவறாமல் பெய்ய ஏழை எளிய விவசாய ஜனங்களின் நிலங்களில் விளைச்சல் உண்டாக,
  4. புகையிலை சம்பந்தமான நோயினால் இந்தியாவில் வருடத்திற்கு 9லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர். புகையிலை அடிமைத்தனததிலிருந்து விடுதலை அடைய,
  5. லெட்சா இன மக்கள் சிக்கிமில் வாழ்கிறார்கள். குரங்கு இறைச்சி சாப்பிடும் பழக்கம் உடைய இவர்கள் இரட்சிப்படைய,
  6. இந்தியா முழுவதும் 1கோடி மக்களின் சேமிப்பு கணக்குகள் செயல்படாமல் 2400 கோடி பணம் முடிங்கியுள்ளது. வங்கி கணக்குகளை மக்கள் பயனள்ளதாய் பயன்படுத்த,
  7. இந்தியாவிலுள்ள 15 வயதிற்குட்பட்ட 35 கோடி சிறுவர்களின் எதிர்காலத்திற்காக பரிசுத்தத்திற்காக தேவனை அறிகிற அறிவிற்காக, நற்குணத்திற்காக ஜெபியுங்கள்.
  8. சென்னையில் 36லட்சம் வாகனங்களில் பாதுகாப்புக்காக, இவைகளில் 26லட்சம் இருசக்கர வாகனங்களுக்காக, பாதுகாப்பு பணியில் உள்ள 3 ஆயிரம் போலீஸ்காரர்களுக்காக,
  9. இந்தியாவில் 1652 மொழிகள் உள்ளன இதில் 436 மொழிகள் முக்கியமானவை இவைகளில் 158 மொழிகளில் வேதத்தில் ஒரு பகுதி இல்லை. இம்மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட,
  10. உலகில் அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக (பாதுகாப்பு, சுகவாழ்வு, பரிசுத்தம், தேவனைப்பற்றிய அறிவு, நல்ல வருமானம் கிடைக்க)
  11. காவல்துறையினர், அரசாங்க துறையினர் செயல்பட்டு பெருகிவரும் கொலை, கொள்ளை, விபச்சாரம் மற்றும் நியாக்கேடுகளை தடுக்க,
  12. இந்தியாவில் கிறிஸ்தவ சிறுவர் துவக்கப்பள்ளிகள் 20 சதவீதம் முதியோர், சிறுவர் இல்லம் 25 சதவீதம், ஊனமுற்றோர் எய்ட்ஸ் நோயாளிகள், தொழுநோயின் மருத்துவமனைகள் 30 சதவீதம் இவற்றின் செயல்பாடுகளுக்காக,
  13. இந்தியாவில் ஆண்டுதோறும் 39 மொழிகளில் பல லட்சம் சுவிசேஷ கைப்பிரதிகள் அச்சடிக்கப்படுகிறது. இவைகள் ஆத்தும இரட்சிப்புக்கு ஏதுவாய் பயன்பட.
  14. உலக அளவில் மிஷனரிஸ்தாபனங்கள் 3ல் 1பங்கு இந்தியாவில்தான் உள்ளது. ஆயினும் 25 சதவீத இந்தியர்க்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லை. இயேசுவை அறியாத 3.5 லட்சம் கிராமங்கள் உள்ளது. மிஷனரிகள் எழும்ப ஜெபியுங்கள்.
  15. மிக அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டள்ள தமிழகம்- வேகமாக குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம், வறண்டு வரும் அணைகள், நீர்ப்பிடிப்புகள், ஏரி, குளங்களின் பகுதிகளில் நீர்வரத்து ஏற்பட, பாபநாசம், மணிமுத்தாறு அணைப்பகுதிகளில் மழை பொழிவு உண்டாக.
  16. இந்தியப் பொருளாதாரத் தரம் குறைந்து கொண்டு போவதாக எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து குறைவடையும் தொழில் வளர்ச்சி விகிதம், துண்டு விழும் பட்ஜெட்டுகள், உயரும் பணவீக்கம், குறையும் அன்னியச் செலவாணி இவற்றால் சார்ந்து வரும் பொருளாதாரம் சீரடைய தொலைநோக்குடன் தலைவர்கள் செயலாற்றும் ஞானம் பெற,
  17. இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளிகளுக்காக, இவர்களில் 35% குழந்தை  தொழிலாளிகள், வறுமை, குடும்ப பின்னணி, கைவிடப்பட்ட சூழ்நிலை, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆர்வம், புரோக்கர், கடத்தற்காரரின் அட்டூழியங்களால் ஆன்ம, சாரீர ரீதியில் பாதிப்படைந்தோர் விடுதலை பெற, பரிசுத்த வாழ்க்கையில் வாஞ்சை உண்டாக.
  18. அஸ்ஸாம் மாநிலத்துக்காக – இம்மாநிலத்தின் தேயிலை தோட்ட தொழிலாளிகள் சுவிசேஷத்தை ஆர்வமாகக் கேட்கின்றனர். ஆனால் இவர்கள் மத்தியில் ஊழியர்கள் மிகக் குறைவு. அஸ்ஸாமின் 6 மாவட்டங்களில் முஸ்ஸீம்கள் சுமார் 90 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் யாவருக்கும் நற்செய்தி பகிர்ந்தளிக்கப்பட.
  19. பள்ளி இறுதி வகுப்பில் தேறியோர் மேற்படிப்புக்கென எடுக்கும் முயற்சிகள், பல்கலைக்கழக படிப்பினை முடித்தோர் நல்ல வேலைவாய்ப்பினை பெற – பெற்றோர் பிள்ளைகள் அரசினர் எடுக்கும் முயற்சிகளால் வாலிபரின் எதிர்காலம் ஆசீர்வதிக்கப்பட. பேற்றோர் கர்த்தரின் சித்தம் அறிந்து பிள்ளைகளின் எதிர்காலக் காரியங்களைத் திட்டமிட.
  20. நமது நாட்டில் புகையிலை, சிகரெட், பொடி, பான்பராக், அன்ஸ் போன்றவற்றிற்கு அடிமைகள் 24 கோடி பேர். ஹேராயின், ஓப்பியம் இவற்றால் கட்டுண்டோர் 60 லட்சம் பேர். மதுபானத்திற்குத் தங்களை விற்றுவிட்டோர் 6.25 கோடி பேர் – கர்த்தர் இவர்களை இரட்சிக்க கருத்தாய் ஜெபிப்போம்.
  21. இந்தியாவில் 6.2 கோடி பேர் குடிசை வாழ்மக்கள். நமது நாட்டில் சுமார் 607க்கும் மேற்பட்ட நகரங்களில் குடிசைப் பகுதிகளிள் உள்ளன. இங்கு வாழும் மக்கள் சுமார் 5 கோடி பேர் இவர்கள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்காக – சிறப்பாக சிறுகுழந்தைகளுக்கு மத்தியில் விதைக்கப்படும் வசனங்கள் பலன் தர – இப்பகுதி மக்கள் முன்னேற்றமடைய,
  22. நம் நாட்டில் 8 மாநிலங்களில் மிக ஏழ்மையானோர் வசிக்கின்றனர். 225 மில்லியன் மக்கள் பசியால் வாடுகின்றனர். நாட்டின் செல்வம் ஒரே பக்கம் குவிதல், பணப்பதுக்கல் போன்றவற்றினின்று நாடு விடுதலை பெற, எளிய மக்களுக்காக நல்ல திட்டங்கள் தீட்டப்படும் போது, அதை அனைவரும் பங்கிட்டு எளியவாpன் முன்னேற்றம் தடைபடும் நிலை வந்துள்ளது. இந்நிலை மாற.
  23. இந்தியாவில் பாதிபேர் கழிவறை இல்லாதோர். குடிநீருக்காக 500 மீட்டர், 1000 மீட்டர் தொலை தூரம் அலைவோர் ஏராளம். தனக்கென வீடு ஒன்று இல்லாமல் அவதிப்படுவோர் அநேகர். தெருக்களில் படுத்து உறங்குவோர் ஏராளம் – மக்களின் அடிப்படைத் தேவைகள் சந்திக்கப்பட. நாடு சுத்தம் சுகாதாரம் பொருந்தியதாய் இருக்க, திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பண்பாடு கட்டோடு அகற்றப்பட.
  24. இந்திய இராணுவ அதிகாரிகள் 36 ஆயிரம் பேர். 11.3 லட்சம் இராணுவ வீரர்கள். இவர்களின் பாதுகாப்பு, பரிசுத்தம், தேசபற்று, ஆராக்கியம், விசுவாசத்துடன் நாட்டுக்காக வாழுதல் ஆகியவற்றுக்காகவும், இவர்கள் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். எல்லைப் புறங்களில் இருக்கும் வீரர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும்.
  25. நமது நாட்டைச் சேர்ந்த அந்தமான் தீவுகளில் உள்ள சபைகள் மறுமலர்ச்சி பெற. இங்கு அதிக அளவில் ஹிந்தி, பெங்காலி பேசும் மக்கள் உள்ளனர். அவர்களிடையே சுவிசேஷம் அறிவிக்கப்பட. பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் வாழ்வு வளம்பெற. இயற்கைப் பேரழிவுகளினின்று இவர்கள் காக்கப்பட. இன்னும் அநேக ஊழியர்கள் இப்பகுதிக்குள் கடந்து சென்று ஊழியங்களைச் செய்ய,
  26. நமது மாநிலத்திலுள்ள டாஸ்மார்க் கடைகள் நிரந்தரமாக மூடப்பட ஜெபிப்போம். மதுவினால் உடைந்து போன குடும்பங்கள் மறுவாழ்வு பெற. அரசாங்கங்கள் தவறான முறையில் ஈட்டும் பணம் அநேக மக்களின் இரத்தக் கண்ணீரின் சேமிப்பு என்பதை உணரவும் ஜெபிப்போம்
  27. தமிழகத்தின் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் 10 படுக்கைகள் மனநலப்பிரிவுக்கென தொடங்கப்படவுள்ளது. இது 16 மாவட்டங்களில் செயல்படவுள்ளது. இத்திட்டம் மூலம் வீட்டாரால் விரட்டப்பட்ட மனநலம் குன்றியோர் ஆதரவு பெறவும், சிகிட்சை மூலம் பலன் அடையவும், நம் மத்தியில் இந்நிலையில் அலைந்து திரிந்வோர் மனத்தெளிவடைய ஜெபிப்போம்.
  28. இந்தியாவில் ஆண்டு தோறும் 3லட்சம் பேர் காசநோயினால் மறிக்கின்றனர். 18 இலட்சம் பேர் ஆண்டுதோறும் பாதிப்படைகின்றனர். இந்நோயுற்றோர் ஒவ்வொருவர் மூலமம் 10-15 பேர் இந்நோயைப் பெறுகின்றனர். இந்நோயின் கொடுமைக்கு நமது நாட்டு மக்கள் பலியாகாதிருக்க.
  29. அதிகாரிகளையும் பொறுப்பிலுள்ளவர்களையும் கொலை செய்தல், பயமுறுத்தல், கிராம மக்களைப் பயமுறுத்தித் தங்கள் பிடியில் வைத்தல், நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவித்தல் போன்ற காரிங்களைத் துணிந்து செயல்படுத்தி வரும் மாவோயிஸ்டுகள், நக்சல் பாரிகள் வாழ்வில் இயேசுவின் கல்வாரி அன்பு குறுக்கிட. இவர்களால் பாதிக்கப்பட்டுள்ள அநேக குடும்பங்களின் வேதனை நீங்க.
  30. கூடன்குளம் அணுமின் நிலைய பிரச்சனைகள் சுமுகமான தீர்வு காணப்பட. “நம்மனைவரும் சகோதரர்” எனக் கூறும் இந்தியர்கள் ஒருவரையொருவர் நேசிக்க – நாட்டின் திட்டஙகள் நன்முறையில், முன் எச்சரிப்புடனும், தொலை நோக்குடனும் செயல்படுத்தப்பட.
  31. நாட்டிலுள்ள மக்களுக்கு சுபிட்சம் உண்டாக.